எதிர்வரும் திங்கள்முதல் நகரங்களுக்கு இடையிலான கடுகதி புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் – திணைக்களத்தின் பொது முகாமையாளர் அறிவிப்பு!
Friday, November 5th, 2021
நகரங்களுக்கு இடையிலான கடுகதி பேரந்து சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர இதனைத் தெரிவித்தார்.
இரவுநேர அஞ்சல் புகையிரத மற்றும் வழமையான நேர அட்டவணைக்கு அமைய இரவு 7 மணிக்கு பின்னர் இடம்பெறும் புகையிரத சேவைகளுடன், குறுந்தூர புகையிரத சேவைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதை அடுத்து கடந்த முதலாம் திகதிமுதல் மாகாணங்களுக்கு இடையிலான அலுவலக புகையிரத சேவைகள் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டன.
இருப்பினும் தற்போது வரையில் இரவு 7 மணிக்கு பின்னரான தூரப் பிரதேசங்களுக்கான புகையிரத சேவைகளும், குறுந்தூர புகையிரத சேவைகளும் வழமை போன்று இடம்பெறுவதில்லை.
நடைமுறையில் உள்ள முறைமைக்கு அமைய இரவு 7 மணிக்கு பின்னர் பயணிகளின் அவசியத்தன்மை கருதி மாத்திரம் புகையிரதங்களைச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகத் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


