எதிர்வரும் திங்களன்று மேல் மாகாணம் தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும் – சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவிப்பு!
Saturday, November 14th, 2020
தனிமைப்படுத்தல் பகுதிகள் மற்றும் மேல் மாகாண பயண கட்டுப்பாடுகள் குறித்த இறுதி முடிவு கொரோனா தொற்றின் தற்போதைய சூழ் நிலையை கருத்திற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை முடிவு எடுக்கப்படும் என சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறும் என்றும் அதனை அடுத்து முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அறிவுறுத்தப்பட்டபடி சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சமுதாய மேம்பாட்டுக்கு பெண்களின் பங்கு அவசியம் - ஐங்கரன்
மின்விநியோக தடை தொடர்பில் வெளியான தகவல்!
இலங்கையின் 10 வங்கிகள், மின்சாரசபை உள்ளிட்டவற்றை தரமிறக்கியது பிட்ச் தரப்படுத்தல்!
|
|
|
ஒவ்வொரு பாடசாலையிலும் மாணவர்களின் சுகாதாரத்தை கண்காணிப்பதற்கு ஆசிரியர் ஒருவர் அதிகாரியாக நியமனம் - ...
விசேட வைத்திய நிபுணர்கள் பரிந்துரை - இலங்கையில் சிறுவர்களுக்கான தடுப்பூசித் திட்டம் வைத்தியசாலைகளிலு...
சகல பாடசாலைகளுக்கும் இன்றுமுதல் வழமைக்கு திரும்பியது - பிரச்சினைகள் எழுமாயின், வலய கல்விப் பணிப்பாளர...


