எதிர்வரும் திங்களன்று ஐ.நா.உதவிச் செயலாளர் நாயகம் இலங்கை விஜயம் – கொவிட் தொற்றுக்குப் பிந்திய பொருளாதார மீட்சி தொடர்பிலும் கவனம் செலுத்துவார் என எதிர்பார்ப்பு!
Saturday, December 11th, 2021
ஐக்கிய நாடுகள் சபைக்கான உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை 13 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
அவர் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் உதவி நிர்வாகி மற்றும் அதன் ஆசிய – பசிபிக் பிராந்தியப் பணிப்பாளராகவும் உள்ளார்.
அண்மையில் முடிவடைந்த COPE 26 உலக காலநிலை மாநாட்டின் முடிவுகள் மற்றும் பிராந்தியத்தினுள் கொவிட் தொற்றுக்குப் பிந்திய பொருளாதார மீட்சி என்பவற்றை ஆராய்வதே உதவிச் செயலாளர் நாயகத்தின் இலங்கை விஜயத்தின் நோக்கமாகும்.
இதன்போது அவர் விசேடமாக மனிதவள அபிவிருத்தித் துறையின் வெற்றிக்காக, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
“வரட்சியின் பாதிப்பிலிருந்து மக்களை காக்க அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும்.’’ -விசேட ஒருங்கிணைப்...
அடுத்தமாதமளவில் மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கை வந்தடையும் - அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்...
இலங்கையின் மிகவும் வயதான பெண் 116 ஆவது வயதில் காலமானார்!
|
|
|


