எதிர்வரும் சில தினங்களில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை – இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!
Wednesday, July 24th, 2024
எதிர்வரும் சில தினங்களில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முயற்சிப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கோதுமை மா இறக்குமதி செய்யும் இரு நிறுவனங்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இதன்படி, பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை 10 ரூபாவினால் குறைக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால், பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் உணரக்கூடிய விலையில் பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தேர்தலை எதிர்கொள்ள தயார் -பிரதமர்!
யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி யாழ் நல்லூரில் பொலிஸாரால் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுப்பு!
சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப...
|
|
|


