எதிர்வரும் காலங்களில் முறையாக வாகன இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தகவல்!
Saturday, July 22nd, 2023
இலங்கையில் எதிர்வரும் காலங்களில் முறையாக வாகன இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த அனைத்து வாகன உதிரி பாகங்களுக்குமான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உதிரி பாகங்களுக்கான தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய வெளிநாட்டு கையிருப்பைக் கருத்தில் கொண்டு மத்திய வங்கியின் பரிந்துரைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய, பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், தொழில்துறை நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள், பொது போக்குவரத்திற்கு மாற்றாக பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு முன்னுரிமை அளிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும் வாகனங்களின் வழமையான இறக்குமதியை மேற்கொள்வதற்கு, நாட்டிலுள்ள வெளிநாட்டு கையிருப்பை உன்னிப்பாகக் கண்காணித்து முடிவெடுக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


