எதிர்வரும் ஆண்டுமுதல் நடைமுறையாகின்றது எரிபொருளுக்கான தினசரி விலை சூத்திரம் – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Sunday, October 22nd, 2023

2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்முதல் இலங்கையில் எரிபொருளுக்கான தினசரி விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

புதிய முறையின் பிரகாரம் எரிபொருட்களின் விலை நாளாந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

கொவிட் தொற்றின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக எரிபொருள் விலைகள் தொடர்பில் தீர்மானிக்க மாதாந்த விலை சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்கபட்டது.

கடந்த இரண்டு வருடங்களாக எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம்தான் விலைகள் நிர்ணயிக்கப்பட்டன. என்றாலும், எரிபொருள் விலை சூத்திரத்திரம் அரசாங்கத்தால் நீக்கப்பட்டது.

ஆனால், தற்போது இரஸ்ரேல் – பலஸ்தீனப் போர், உக்ரைன் – ரஷ்ய போர் உட்பட உலகலாளிவிய ரீதியில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.

இதனால் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகளில் தினமும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதன் பிரகாரம் எரிபொருளுக்கு தினசரி விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்தியாவில் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. அதனை ஒத்ததாகவே இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் விலை சூத்திர முறையும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

Related posts: