எதிர்காலத்தில் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு – இராணுவத் தளபதி தெரிவிப்பு!
Tuesday, May 11th, 2021
நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு தேவைப்பட்டால் எதிர்காலத்தில் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து இன்று நள்ளிரவுமுதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் சுகாதார அதிகாரிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடத்திய கலந்துரையாடல்களை அடுத்து எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மேலும் 100 பேருக்கு கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க அனுமதி!
வடக்கில் திங்கள்முதல் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க ஏற்பாடு - சுகாதார சேவை...
இன்றிலிருந்து அடுத்த சில நாள்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை - வளிமண்டலவியல் திணைக்களம் எச்ச...
|
|
|


