எச்சரிக்கை… வெள்ளத்தில் விளையாடிய இரு சிறுவர்கள் பலி:  வத்தளையில் சோகம்!

Wednesday, May 18th, 2016

சீரற்ற காலநிலையால் தமது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் போது பெரியவர்களுக்கு ஏற்படும் தாக்கம் சிறுவர்களிடத்தில் ஏற்படுவதில்லை. அத்தகையதொரு நிலையால் இன்று இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வத்தளை அவரகொட்டு பகுதியில் இன்று தமது வீட்டுக்கு முன்பாக நிறைந்திருந்த வெள்ள நீரில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்களே திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

9 மற்றும் 16 வயதுடைய சிறுவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சடலங்கள் இராகம போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால்  மேல்மாகாணத்தில் மாத்திரம் 253028 பேர் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: