எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – 78% கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தகவல்!

Tuesday, February 15th, 2022

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த மோசமான கழிபொருட்களில் 78 விகிதமானவை அகற்றப்பட்டுள்ளதாக இலங்கையின் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்தள்ளது.

அத்துடன் மீட்பு நடவடிக்கைக்கு பொறுப்பான அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் இந்ததகவலை வழங்கியுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் கூறியுள்ளார்.

இதேவேளை, எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் அழிவினை அடுத்து கடலில் வீழ்ந்துள்ள கழிபொருட்களை அகற்றுவதற்காக சீன நிறுவனமொன்றுக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்கு வந்துள்ளன.

சேதமடைந்த பொருட்களை அகற்றுவதற்கான திட்டத்தை தயாரிப்பதற்காக இந்த இரண்டு கப்பல்களாலும் பூர்வாங்க பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை மே மாதத்திற்குள் தமது பணிகள் அனைத்தும் நிறைவடையும் என சீன நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


திருகோணேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் கடலில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் -அமைச்சர் விதுர விக்ரமநாயக...
தரம் 10 இல் சாதாரணதரப் பரீட்சை – ஆராயப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!
ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்...