எக்ஸ்ப்ரஸ் பேர்ள் விவகாரம் – சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னம் தலைமையிலான அமைச்சரவை நியமித்த விசேட குழு சிங்கப்பூர் பயணம்!
Monday, July 17th, 2023
இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றுதலுக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட சேதங்களுக்கான இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாட அமைச்சரவை நியமித்த விசேட குழு இன்று சிங்கப்பூருக்கு பயணமாகிறது.
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னம் இந்த குழுவிற்கு தலைமை தாங்குகின்றார்.
குறித்த பேச்சுவார்த்தையை நாளை மற்றும் நாளைமறுதினங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கப்பல் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் சட்டத்தரணிகள் மற்றும் அதிகாரிகள் குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கிழக்கு மாகாண பட்டதாரிகள் பிரச்சினைக்கு தீர்வு!
மாகாணசபை தேர்தல் விவகாரம் - தொடரும் இழுபறி நிலை - பொது இணக்கப்பாட்டை வரும் புதனன்று தெரிவிக்குமாறு க...
தெல்லிப்பழை - யூனியன் கல்லுாரி மாணவர்கள் மீது தாக்குதல் - தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய பொலிஸார...
|
|
|


