எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 31ஆம் திகதி விசாரணை செய்ய வேண்டாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு!
Wednesday, May 22nd, 2024
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி விசாரணை செய்ய வேண்டாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டமா அதிபரினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சவாலுக்கு உட்படுத்தி கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.
அதன்படி இந்த மனு மீதான பரிசீலனைகள் முடியும் வரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரரின் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று, வரும் 31 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் தொடர்புடைய வழக்கை விசாரிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துக்குள்ளாகி நேற்றுடன் மூன்று ஆண்டுகள் முடிவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


