எகிப்தில் நடைபெறும் ஐ.நாவின் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொள்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
Sunday, October 9th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் எகிப்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாலைதீவின் சபாநாயகருமான மொஹமட் நஷீட் மற்றும் நோர்வேயின் முன்னாள் சுற்றாடல் மற்றும் காலநிலை அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதியின் சுற்றாடல் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தனவும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கை நிலைமைகள் குறித்து ஜப்பான் திருப்தி!
காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுகாதார அமைச்சு!
கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க இலங்கைக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் – இலங்கையின் அரச தலைவர்...
|
|
|


