ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு 5ஆம் தர புலமைப்பரிசில்!

2016ம் ஆண்டு நடைபெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேலதிகமாக புள்ளிகளை பெற்று சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தில் அங்கத்தவர்களாக உள்ளவர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் பணம் வழங்கப்படவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் அடுத்தமாதம் 30ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று சபை அறிவித்துள்ளது. அங்கத்தவர்களின் பிள்ளைகள் 9000 பேருக்கு இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. ஒரு மாணவனுக்கான புலமைப்பரிசில் தொகை 15000 ரூபா என ஊழியர் நம்பிக்கை நிதியச்சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கும் விண்ணப்பப் படிவத்திற்கும் நிதியத்தின் இணையத்தளத்தை www.etb.lk பார்வையிடலாம்.
Related posts:
தங்க விருதை வென்றது இலங்கை விமானப்படை!
ஜனாதிபதி பதவியேற்று இன்று 4 வருடங்கள் பூர்த்தி!
திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்றுமுதல் நடைமுறையில் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!
|
|