ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா!
Friday, August 14th, 2020
ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
தொழில் அமைச்சில் நேற்றையதினம் தமது கடமைகளை ஆரம்பித்த அமைச்சர், தொழில் அமைச்சு தொழிலாளர்களுக்காக சேவையாற்றும் இடமாக அன்றி தொழில் வழங்குநர் நிறுவனமாக இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் தொழிலாளர்களின் நெருக்கடிகள் பற்றியும் கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகள் பற்றியும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிகரித்து வரும் வரட்சியால் 16 மாவட்டங்கள் பாதிப்பு!
அதிகரித்த கட்டணம் - 6 இலட்சம் மின் பாவனையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்!
நாளை திறைசேரி உத்தரவாதம் வழங்கினால் இரண்டு நாட்களில் வர்த்தமானி வெளியிடப்படும் என தகவல்!
|
|
|


