ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு!
Wednesday, August 3rd, 2016
பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் கல்விசாரா ஊழியர்களின் ஓய்வுப் பெறும் வயது எல்லை அதிகரிக்கப்பட்டுள்ளதாக உயர்க்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய கல்வி சாரா ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது எல்லையானது 55 இல் இருந்து 60 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது குறித்து கல்வி சாரா அதிகாரிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்
இதேவேளை பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லை 65ஆக அதிகரிக்கப்படவுள்ளதாகவும், உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
யாழ்ப்பாத்தில்பொதுமக்கள் குறைகேள் மையம்!
எரிபொருள் இல்லையென எவராவது சொன்னால் அது அப்பட்டமான பொய்யாகும் - அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவிப்ப...
குற்றவியல் நீதிமன்றங்களில் உள்ள மொத்த வழக்குகளில் 33 வீதமானவை சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல...
|
|
|


