ஊரடங்கை மீறிய குற்றத்தில் இதுவரை 66 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது – 8 ஆயிரத்து 671 பேருக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்தாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேர காலத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த காலப்பகுதிக்குள் 38 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 66 ஆயிரத்து 519 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதுடன் குறித்த காலப்பகுதிக்குள் 18 ஆயிரத்து 733 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட 21 ஆயிரத்து 787 பேருக்கு எதிராக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 8 ஆயிரத்து 671 பேருக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்தாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|