ஊரடங்கு சட்டத்தை மாகாண மட்டத்தில் தளர்த்த ஜனாதிபதி தீர்மானம்? – ஜனாதிபதி செயலகம்!

Thursday, April 16th, 2020

மாகாண சுகாதார பரிந்துரைகளை கருத்தில் கொண்டு மாவட்டங்கள் மீதான ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்து முடிவெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலக தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து மாகாண வைத்திய பணிப்பாளர்கள் உட்பட சுகாதார துறை அதிகாரிகள் தங்கள் மாகாண நிலைமைகள் தொடர்பில் இதன் போது ஜனாதிபதியிடம் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

மாகாணங்களில் நிலவும் நிலைமையை கருத்திற் கொண்டு தொழில்துறை நிறுவனங்கள், விவசாய மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்பு போலவே செயற்படுத்தவே அனுமதிக்கப்படும்.

இதற்கான பரிந்துரைகளை சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் மூலம் விரைவில் சமர்ப்பிக்குமாறு மாகாண சுகாதார சேவை இயக்குனர்களிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.

அன்றாட ஊதியம் பெறுபவர்களின் வாழ்வாதாரத்தில் சிறப்பு கவனம் செலுத்துவதே முக்கிய நோக்கம் என்று குறித்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடாளவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் 19 மாவட்டங்களுக்காக இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு அமுல்படுத்தப்படடமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வன்முறையைக் கையாண்டு அநாகரிகமான முறையில் நசுக்க முற்பட்டமையை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை ஆசிரியர்...
நிறுத்தப்பட்டுள்ள பொதுப்போக்குவரத்து சேவை ஏப்ரல்’ 20 முதல் ஆரம்பம் - அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையி...
எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை சர்வதேச நாணய நிதிய அறிக்கை மீதான விவாதம் நாடாள...

நீதிமன்ற அவமதிப்பு விவகாரம்: நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை...
விளையாட்டுத் துறையை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுங்கள் - துறைசார் திணைக்கள அதிகாரிகளுக்கு அ...
அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அரச ஊழியர் அழைப்பு - புதிய சுற்றறிக்கையை வெளியிட்டது அரசாங்கம்!