ஊரடங்கு சட்டத்தினை மீறிய 6041 பேர் கைது – பொலிஸ் தலைமையகம்!
 Sunday, March 29th, 2020
        
                    Sunday, March 29th, 2020
            
கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 856 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் 184 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 6041 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தனி ஒரு சிகரட் விற்பனை செய்வதற்கான தடை வரவேற்புக்குறியது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவை இரத்து!
இராணுவ அதிகாரிக்கு எதிரான தடை : அமெரிக்காவுடன் முரண்பட முடியாது என அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        