ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சேவை இடம்பெறாது – தபால்மா அதிபர் அறிவிப்பு!

ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பதன் காரணமாக மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் எதிர்வரும் 4ஆம் திகதி அஞ்சல் அலுவலகங்கள் திறக்கப்பட மாட்டாது என அஞ்சல் மா அதிபர் ரஞ்சன் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் வழமைபோல அஞ்சல் அலுவலகங்கள் திறந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், குறித்த பகுதிகளில் பணிகளில் ஈடுபடுவதா என்பது தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்படும் என ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அஞ்சல் காரியாலயங்கள் மற்றும் உப அஞ்சல் காரியாலயங்களில் கிருமித்தொற்று நீக்கம் மற்றும் ஊழியர்களுக்கான சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் உரிய முறையில் கிடைக்கப்பெறாதமையினால், பணிகளில் ஈடுபடுவதில்லை என அந்த சங்கம் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கோப் அறிக்கையின் அடிக்குறிப்புகளுக்கு இணங்கப்போவதில்லை – கணக்காய்வாளர் நாயகம்!
ஜனவரிமுதல் அரைசொகுசு பஸ் சேவை இரத்து - போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு!
கொழும்பை அண்மித்த கரையோரங்களில் மருத்துவ கழிவுப்பொருட்கள் குவிந்துள்ளது - சமுத்திர சூழல் பாதுகாப்பு...
|
|