ஊடகவியலாளர் நடேசனின் படுகொலைவிசாரணைஆரம்பிக்கப்படாததைக் கண்டித்துமட்டக்களப்பில் கவனயீர்ப்புப்போராட்டம்.

ஊடகவியலாளர் நடேசனின் படுகொலைதொடர்பில் இதுவரையில் முறையான விசாரணை ஆரம்பிக்கப்படாததைக் கண்டித்தும் உடனடியாக விஷேட பொலிஸ் குழுவொன்றினை அமைத்து விசாரணையை துரிதப்படுத்தமாறு கோரியும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மட்டக்களப்புகாந்திபூங்காமுன்றலில் இன்றையதினம் மாலை இக்கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகமாவட்டதமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்புமாவட்டத்தின் மூத்தஊடகவியலாளரானஐயாத்துரைநடேசன் சுட்டுக்கொல்லப்பட்டு13 வருடங்களைக் கடந்துள்ளபோதிலும், இதுவரையில் முறையானவிசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லையெனகுறித்தஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் சிவில் சமூகபிரதிநிதிகள்,பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரின் ஆதரவும் கோரப்பட்டுள்ளது.
Related posts:
|
|