ஊடகச்சுதந்திரம் பற்றி மக்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் பெற்றுக் கொள்ளும் காலம் நீடிப்பு!
Thursday, January 5th, 2017
இன்றுடன் முடிவடையவிருந்த ஊடகச்சுதந்திரம், தராதரம் என்பன பற்றி மக்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் பெற்றுக் கொள்ளும் காலம் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
உயர்தரத்திலான ஊடக கலாசாரத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஊடக சுதந்திரத்தையும், தராதரத்தையும் உறுதிப்படுத்துவது இதன் நோக்கமாகும். மதத் தலைவர்களின் கருத்துக்களும், யோசனைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.
கருத்துக்களையும், யோசனைகளையும் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம். முகவரி பணிப்பாளர் நாயகம், அரசாங்க தகவல் திணைக்களம், இலக்கம் 163, பொல்ஹேன்கொட, நாரஹன்பிட்டிய என்பதாகும். 0112- 514 853 என்ற பக்ஸ் இலக்கத்திற்கும் கருத்துக்களையும், யோசனைகளையும் முன் வைக்கலாம். ranga@dgi.gov.lk மின் அஞ்சல் மூலமாகவும் அனுப்பிவைக்கமுடியும்.

Related posts:
தனியார் மருத்துவ பீட உருவாக்கமே வடக்கின் வைத்தியர்கள் பற்றாக்குறையை பூர்த்திசெய்யும் பிரதி பணிப்பாள...
அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் ஆரம்பம் – ஏப்ரல் 9 புதுவருட விடுமுறைக்காக மீண்டும் மூடப்படும் எ...
தீவகத்தில் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சார திட்டம் - நெடுந்தீவிலும் பூமி பூஜை!
|
|
|


