ஊடகங்கள் காரணமாகவே குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது – பொலிஸ் மா அதிபர்!
Saturday, October 1st, 2016
நாட்டில் பெரியளவில் குற்றச் செயல்கள் அதிகரிக்கவில்லை எனவும் ஊடகங்கள் காரணமாகவே குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். புள்ளிவிபரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதை காண முடியவில்லை.சில சம்பவங்கள் தொடர்பான ஊடகங்களின் செயற்பாடுகளும் நடத்தைகளும் சம்பவங்களை பெருப்பித்து காட்டுகின்றன எனவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பொலிஸாரின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
குடிநீர் பிரச்சினை தொடர்பில் வேலணை பிரதேச சபை அதிரடி முடிவு – உடன் அமுலாக்க தவிசாளர் உத்தரவு!
வரிக் கொள்கையில் மாற்றம் வேண்டும் : அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது GMOA!
முதல் மூன்று மாதங்களில் 698 பேர் பலி - வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை!
|
|
|


