ஊடகங்களை ஒழுங்குப்படுத்த புதிய பொறிமுறை!

அச்சு மற்றும் இலத்திரனியல் என அனைத்து ஊடகங்களையும் ஒழுங்குப்படுத்த பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது சகலரது பங்களிப்பு மற்றும் இணக்கத்துடன் ஏற்படுத்தப்படும் சுயாதீன ஊடக ஒழுங்கு பொறிமுறையே அன்றி அரசாங்க்த்தினால் ஒழுங்குப்படுத்தும் பொறிமுறை அல்ல என ஊடகத்துறை பிரதியமைச்சர் கரு. பரணவிதான தெரிவித்துள்ளார்.
ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் பொறிமுறை தொடர்பாக தற்போது கலந்துரையாடப்பட்டு வருகிறது.அரசாங்கம் ஸ்தாபிக்கும் ஊடக ஆணைக்குழுவின் ஊடாக இலங்கைக்கு பொருத்தமான ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் பொறிமுறை என்ன என்பது தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்கம் இதற்கான வசதிகளை மாத்திரமே வழங்கும் எனவும் பிரதியமைச்சர் கரு. பரணவிதான கூறியுள்ளார்.
Related posts:
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு!
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது!
தபாலகங்கள் மூலம் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்க தீர்மானம் - மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் த...
|
|