உழுந்திற்கான வரி அதிகரிப்பு!
Thursday, January 10th, 2019
இறக்குமதி செய்யப்படும் உழுந்திற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் உழுந்திற்கு விதிக்கப்பட்டிருந்த 125 ரூபா வரி, 200 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உழுந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் சிரேஷ்ட விவசாய பொருளியல் நிபுணர் துமிந்த பிரியதர்சன தெரிவித்துள்ளார்.
நாட்டில் உழுந்து அறுவடை ஆரம்பித்துள்ளமையால், சந்தையில் அதற்கான விலை வீழ்ச்சி அடையக்கூடும் என அவர் கூறியுள்ளார்.
உடன் அமுலாகும் வகையில் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்படும் உழுந்திற்கான வரி மறு அறிவித்தல் வரை நீடிக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
ஊழல் ஒழிப்பு காரியாலயத்தை மூடிவிட அமைச்சரவை முடிவு!
ஏப்ரல் 8 முதல் புத்தாண்டு விசேட பேருந்து சேவை ஆரம்பம் - இலங்கை தேசிய போக்குவரத்து சபை தெரிவிப்பு!
ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட பல நாடுகளில் இலங்கையின் இளநீருக்கு அதிக கேள்வி - விவசாய அமைச்சு தெரிவி...
|
|
|


