உள்ளூர் உற்பத்தியாளர்களை வலுவூட்டும் வகையில் ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிப்பு – இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவிப்பு!
Saturday, February 26th, 2022
உள்ளூர் உற்பத்தியாளரகளை வலுவூட்டவும் உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதற்கான வழிவகைகளை உருவாக்குவதற்காகவும் ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் அறிவித்துள்ளார்.
இருப்பினும் பால் சார்ந்த பொருட்களின் விலையில் எந்தத் திருத்தமும் இருக்காது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
வாழ்கைச் சுமை அதிகரித்துள்ள நிலையில் நேற்று நள்ளிரவுமுதல் எல்.ஐ.ஓ.சியின் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏற்கனவே நாட்டில் பால்மாவிற்கு தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவிவரும் நிலையில் பாலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அவுஸ்திரேலியாவை அபார வெற்றிக்கண்டுள்ளார் முரளி - அமைச்ர் அர்ஜுன
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கருப்புப் பெட்டி மீட்பு - எண்ணெய் கசிவு ஏற்பட்டால் எதிர்கொள்வதற்கு சர்வதே...
இந்து சமுத்திர பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்புக்கு ஆதரவாக இலங்கைக்கு விமானம் ஒன்றை வழங்க அவுஸ்தி...
|
|
|


