உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் திருத்தம் – அமைச்சரவையில் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சு தெரிவிப்பு!
Friday, September 30th, 2022
உள்ளூராட்சி மன்ற சட்டங்கள் திருத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் உள்ளூராட்சி மன்ற சட்டத் திருத்தம் குறித்த முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இது குறித்த முன்மொழிவுகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதனை உள்ளூராட்சி மன்ற அமைச்சு உறுதி செய்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இந்த முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் சட்ட வரைவு திணைக்களம் அடுத்த கட்ட பணிகளை முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் உள்ளிட்ட சில விடயங்களில் திருத்தங்களைச் செய்வது குறித்து யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
முற்றவெளிப் பகுதியில் சுத்திகரிப்பு பணி தீவிரம்!
2935 ஏக்கர் நிலப்பரப்பில் கிளிநொச்சியில் சிறுபோக நெற்செய்கை!
விஷம் தொடர்பில் இலங்கையில் மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொலைபேசி இலக்கம்!
|
|
|


