உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – செலவின அறிக்கையை எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்து!

Saturday, May 10th, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான செலவின அறிக்கையை எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான தனித்தனி அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வேட்பாளர்கள் தாம் போட்டியிட்ட மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளுக்குக் குறித்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்க முடியும்.

எனினும், இவ்வாறு செலவு அறிக்கையைச் சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

000

Related posts: