உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தும் அரசாங்கம்!
Friday, April 26th, 2024
உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்படி, உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள 8,400 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பொருத்து வீடுகள் பெறுவதற்கு தென்மாராட்சி மக்கள் ஆர்வம்!
வர்த்தகர்கள் தொடர்பில் முறையிட புதிய இலக்கம் அறிமுகம்!
விரைவில் எரிபொருளின் விலைகளில் திருத்தம் - மக்களுக்கு நிவாரணம் வழங்க மின்சாரம் கட்டணமும் குறைக்கப்பட...
|
|
|


