உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிரான மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை !
Thursday, July 27th, 2023
உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மார்ச் 9 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால், அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி தேசிய மக்கள் சக்தி மற்றும் பெப்ஃப்ரல் அமைப்பு என்பன மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஏனைய பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல் உரிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மேலதிக மன்றாடியார் நாயகம் பிரியந்த நாவான தெரிவித்தார்.
இந்த நிலையில் மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பால் மா இறக்குமதி நிறுத்தம் தொடர்பில் அரசுக்கு எழுத்து மூலம் அறிவிப்பு!
விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் நாளை நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படும் - எரிசக்தி...
சிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று - முகக்கவசங்களை அணியுமாறு சுகாதார தரப்பினர் அறிவுற...
|
|
|


