உள்ளூராட்சி தேர்தல் – தபால் மூல வாக்கெடுப்பு இம்மாதம் இடம்பெறாது – தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!
Friday, February 17th, 2023
உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் வெளியான அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம்திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறாது எனவும், அதற்கான உத்தியோகபூர்வ திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர்!
கொரோனா அச்சுறுத்தலால் யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் கல்வி வலய அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை...
இலங்கை பயணிகளை துபாய்க்கு அழைத்துச் செல்வதை இடை நிறுத்தியது எமிரேட்ஸ் !
|
|
|


