உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பில் வெளியானது அதிவிசேட வர்த்தமானி – காலை 7 மணிமுதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு இடம்பெறும் எனவும் தெரிவிப்பு!

Wednesday, February 1st, 2023

உள்ளூராட்சித் தேர்தலை மார்ச் 9 ஆம் திகதி நடத்துவதாக அறிவிக்கும் வர்த்தமானி மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்தினதும் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன், இந்த வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தேர்தல் நடத்தப்படும் உள்ளூராட்சி சபைகளின் விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி, காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 58 அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 80 ஆயிரத்து 720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இருப்பினும் இது தொடர்பான வர்த்தமானி யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரினால் வெளியிடப்படவில்லை என அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: