உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலங்களில் உள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Tuesday, August 8th, 2023உள்ளூராட்சி மன்றம், நகர சபை மற்றும் மாநகர சபை திருத்தச் சட்டமூலங்களில் உள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த சரத்துகள் நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை அல்லது வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்;ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஜயந்த கட்டகொடவினால் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0000
Related posts:
அதிக பயணிகளை ஏற்றிச்சென்றால் அரைச்சொகுசு பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும்!
யாழ். மாநகர சபையின் நிலையியல் குழுக்கள் நியமிக்கப்பட்டன!
வீதி புனரமைப்பின் போது சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படும் - ஜனாதிபதி செயலணி...
|
|
|


