உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை விசேட கலந்துரையாடல்!
 Saturday, March 18th, 2023
        
                    Saturday, March 18th, 2023
            
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
அன்று காலை ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
இதில் அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை –
ஜனாதிபதித் தேர்தல் நடத்தும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2024 ஆரம்பத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தல் குறித்து நாடாளுமன்றக் கூட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர்களிடமும் ஜனாதிபதி இது குறித்து பேசியதாக அந்த பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது.
எவ்வாறாயினும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாது என ஜனாதிபதி எங்கும் குறிப்பிடவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        