உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நாளை விசேட கலந்துரையாடல் – தேர்தலை நடத்துவது தொடர்பில் விரிவாக ஆராயப்படும் எனவும் தகவல்!
Thursday, December 22nd, 2022
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான கலந்துரையாடலுக்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களையும் இம்மாதம் 23 ஆம் திகதி கொழும்புக்கு வரவழைக்கவுள்ளது.
ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவினால் இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பெண்கள் மீது வன்கொடுமையை தூண்டுகிறார் விஜயகலா - ஐ.நா.வில் முறைப்பாடு!
12 ஆயிரம் குழந்தைகள் பலி - ஐ.நா.!
உடுவில் பிரதேச எல்லைக்குள் உள்ள சகல பாடசாலைகளையும் மூட அறிவுறுத்தல்!
|
|
|


