காங்கேசன்துறைக்கு ரயில்சேவை ஆரம்பம்!

Wednesday, December 13th, 2017

கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான கடுகதி ரயில் சேவையில் ஈடுபடுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் , காலை 9 மணியளவில் 15 ரயில்கள் கொழும்பை வந்தடைந்தாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சார்த்திகளின் நலன் கருதி கடுகதி ரயில் சேவை சொகுசு நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் சேவையாக ஈடுபடுகின்றது.

இந்த ரயில் சேவைகளுக்கு அமைவாக 1000 பஸ்களையும் 60 சொகுசு பஸ்களையும் , பாடசாலை மாணவர்களுக்கான பஸ்களும் இலங்கை போக்குவரத்துசபை நாளாந்த சேவைகளில் ஈடுபடுத்தியுள்ளது. ரயில் பருவகாலச்சீட்டை வைத்திருப்போரும் முன்கூட்டியே ஆசனங்களை ஒதுக்கீடு செய்த பயணிகளும் இந்த பஸ்களில் இலவசமாக பயணிக்க முடியும் என்று போக்குவரத்துசபைத்தலைவர் தெரிவித்தார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பரீட்சார்த்திகளின் தேவைக்கு அமைவாக ரயில் பருவச்சீட்டுக்கள் மூலம் தனியார் பஸ்களில் பயணிப்பதற்கு வசதிகள் வழங்கு முன்வந்துள்ளன.

ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தையடுத்து பயணிகளின் வசதி கருதி போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரத்தை கொண்ட பஸ்களுக்கு எந்த வீதிகளிலும் சேவைகளை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதேவேளை ரயில்வே வேலைநிறுத்தம் தொடர்பாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் ஏசிஎம் அபயவிக்கரம கருத்து தெரிவிக்கையில்,

இதுவரை 7 தொழிற்சங்கங்களை சேர்ந்த அங்கத்தவர்கள் கடமைக்கு திரும்பியுள்ளனர். ஏனைய ஊழியர்களும் இன்று கடமைக்கு திருப்புவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். ரயில்வே ஊழியர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரசிங்க மற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சரவைக்கு ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.

Related posts: