உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்படக் கூடாது – தேர்தல் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் – முன்னாள் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!
Wednesday, February 22nd, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்படக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“உள்ளூராட்சித் தேர்தலை எவரும் ஒத்திவைக்கவில்லை. அதனை பிற்போடவும் தேவையில்லை. தேர்தல் திட்டமிட்டபடி நடக்க வேண்டும்” என்பதே தமது கருத்து என்றார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபா பீடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, நாடாளுமன்ற அமர்வை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்று காலை 9.30 வரை ஒத்திவைத்தார்.
அதன்பின்னர், நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறியபோது, முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இதேவேளை, உறுதியளித்தபடி உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் தற்போது இல்லையென, தேர்தல் ஆணைக்குழு உயர்நீதிமன்றுக்கு அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே, எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பும் காலவரையின்றி தேர்தல் ஆணைக்குழுவினால் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


