உள்ளூராட்சித் தேர்தலில் பெண்கள் அரசியல் ரீதியாகப் பங்கேற்பதிலுள்ள சவால்களை அடையாளம் காணுதல் தொடர்பான விசேட செயலமர்வு !
Tuesday, January 24th, 2017
இலங்கைத் தேர்தல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பெண்கள் அரசியல் ரீதியாகப் பங்கேற்பதிலுள்ள சவால்களை அடையாளம் காணுதல் மற்றும் அவற்றை எதிர்கொண்டு முன்னேறிச் செல்தல் தொடர்பான விசேட செயலமர்வொன்று இன்று செவ்வாய்க்கிழமை(24) முற்பகல் முதல் யாழ். ரில்கோ தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
இச் செயலமர்வுக்குத் தேர்தல்கள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எம்.எம்.முகமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல், தற்போதைய ஆட்சியில் பெண்களுக்கு அரசியல் ரீதியாக வழங்கப்பட்டுள்ள சுதந்திரம், தகவல் தொழில்நுட்ப யுகத்தில் அரசியல் கண்ணோட்டம், சர்வதேச நாடுகள் மற்றும் அயல் நாடுகளில் பெண்களின் அரசியல் வகிபாகம், உள்ளூராட்சித் தேர்தலில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Related posts:
|
|
|


