உள்ளூராட்சிகளின் எல்லை நிர்ணய மேன்முறையீட்டு விசாரணையின் கால எல்லை மேலும் நீடிப்பு!

உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய நடைமுறை சார்ந்த மேன்முறையீடுகளை விசாரிக்கும் கால எல்லையை டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மன்ற மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவின் கோரிக்கையை ஏற்று கால எல்லையை நீடித்ததாக தெரிவித்த அவர் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் தனது அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவின் அறிக்கை முழுமையானதாக இருப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் நோக்கமாகும். அறிக்கiயின் நகலை சகல அரசியல் கட்சிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Related posts:
பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு – வானிலை அவதான நிலையம்!
தற்போதைய கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட வாய்ப்பு - சுகாதார விதிகளை மக்கள் ப...
உலக பணவீக்க பட்டியலில் இலங்கைக்கு சாதகமான முன்னேற்றம்!
|
|