உள்ளுர் கைத்தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை – அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
Friday, October 21st, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் உள்ளுர் கைத்தொழில்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பீங்கான், கண்ணாடி மற்றும் சுகாதாரப் பொருட்கள் உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் வருடாந்த ஏற்றுமதி வருமானம் 10 முதல் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்காலத்தில் இறக்குமதியை குறைத்து உள்ளூர் இறக்குமதி மாற்று உற்பத்திகளை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிற்பொக்கெட் அடித்த பெண் சில நிமிடங்களில் கைது!
காலாவதியான மருந்துகள் விற்பனை: மருந்தகத்திற்கு சீல் வைக்க உத்தரவு!
யார் என்னதான் தம்பட்டம் அடித்தாலும் எம்மால் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும் – அமைச்சர் பந்துல குணவர்த...
|
|
|


