உள்நாட்டு தொழில்துறை தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் பந்துல குணவர்தன!

உள்நாட்டு தொழில்துறைக்கான மூலப்பொருள் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய தேசிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாம் எண்ணெய் தடைசெய்யப்பட்டமையை அடுத்து அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள தொழில்துறையினருடன் கலந்துரையாடலை நடத்தி அவர்களுக்கு மாற்று வழிமுறைகள் தொடர்பான தீர்வை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் உள்நாட்டு பிஸ்கட் தொழிற்துறையினை சிறந்த நிலையில் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதன் ஊடாக இறக்குமதி செய்யப்படும் பாம் எண்ணெய் பாவனையை குறைப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|