உள்நாட்டு உற்பத்திகள் சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Monday, September 28th, 2020

முதலீட்டாளர்களை இனங்கண்டு நிறுவன மற்றும் தனிப்பட்ட ரீதியாக திட்டமிடப்பட்டுள்ள புத்தாக்க உற்பத்திகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டின் பல நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிகளின் பிரதிபலனாக உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக்கூடிய பல்வேறு புத்தாக்க உற்பத்திகள் திட்டமிடப்பட்டுள்ளன.

அவற்றை உற்பத்தி செய்வதன் மூலம் அதிகமான அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்வதற்கும், புத்தாக்க உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும் முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிதி மற்றும் மூலதனச்சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி சீர்திருத்த இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கடந்த 23ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் வட்டி வீதம், நிதிப் பிரிவு மற்றும் பங்குச் சந்தை நிலவரம் மகிழ்ச்சிகரமானதாக உள்ளதாக குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், 10 முதன்மையான விடயங்களை இனங்கண்டு துரித பொருளாதார அபிவிருத்திக்கு வழியேற்படுத்துதல் தனது அமைச்சின் நோக்கம் எனதெரிவித்த ஜனாதிபதி உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது முதலீட்டாளர்களைக் கவரக்கூடிய பின்புலம் எமது நாட்டில் சிறப்பாக ஏற்பட்டுள்ளது என்றும் அதற்காக உரிய பிரச்சார உத்திகளைக் கையாள்வதின் மூலமும் வெளிநாடுகளில் உள்ள எமது தூதுவர்களின் ஒத்துழைப்புடனும் முதலீட்டாளர்களை வரவழைக்கத் திட்டமிடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts: