உள்நாட்டு அரிசி விலை குறைவடைந்துள்ளது – அரிசி இறக்குமதியாளர்கள் சங்கம்!

Friday, January 13th, 2017

அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து உள்நாட்டு அரிசியின் விலை குறைவடைந்துள்ளதாகவும் இதனடிப்படையில் உள்நாட்டு அரிசி ஒரு கிலோவின் விலை 8 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாகவும்  அரிசி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஹேமக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அரிசி மீதான இறக்குமதி வரியை 65 ரூபாவால் குறைப்பதற்கு அரசாங்கம் கடந்த 6 ஆம் திகதி நடவடிக்கை எடுத்திருந்தது.இதன் பிரகாரம், அரிசி இறக்குமதி தீர்வை வரியான 15 ரூபாவை மாத்திரம் அறவிடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருந்ததுடன், இதன் மூலம் தனியார் வர்த்தகர்களுக்கும் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது,

இதன் மூலம் அரிசி ஒரு கிலோகிராமை 76 ரூபாவிலும் குறைவான விலைக்கு விற்பனை செய்ய முடியும் என அறிக்கையொன்றினூடாக நிதியமைச்சு தெரிவித்தது

arisi

Related posts: