உலக சுற்றுலாத்துறை மாநாடு இலங்கையில்!
Friday, May 6th, 2016
ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்துடன் இணைந்து சுற்றுலாத்துறை தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்றினை எதிர்வரும் ஜுலை மாதம் 11 முதல் 14 ஆம் திகதி வரையான நான்கு நாட்கள் இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
‘அபிவிருத்தி, சாமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு சுற்றுலாத்துறை ஓர் ஊக்கியாக’ என்ற தலைப்பின் கீழ் சர்வதேச மாநாட்டினை நடாத்துவதற்கு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சும் அதன் கீழ் இயங்கும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த மாநாட்டுக்கென, ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா அமைப்பின (ருNறுவுழு) தொழில்நுட்ப உதவியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் இவ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் இருந்து சுமார் 70 வெளிநாட்டவர்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வளவாளர்கள், பேச்சாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட மேலும் சுமார் 30 வெளிநாட்டவர்கள் பங்குபற்றுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
|
|
|


