உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும் போது பலாபலனை மக்களுக்கு வழங்குவோம் – நிதியமைச்சர்!
Wednesday, September 12th, 2018
சர்வதேச அளவில் எரிபொருள் சம்பந்தமாக காணப்படுகின்ற நிலமைக்கு அமைவாகவே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதாகவும், அந்நிலைமையில் மாற்றம் நிகழும் பட்சத்தில் உரிய நிவாரணங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச அளவில் எருபொருள் விலை அதிகரிக்கும் போது விலைச் சூத்திரத்திற்கு அமைவாக நாட்டிலும் எருபொருள் விலை அதிகரிக்கும் என்றும், சர்வதேசத்தில் விலை குறையும் போது அதன் பிரதிபலனையும் மக்களுக்கு வழங்குவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
Related posts:
மீண்டும் இனவாதம் தலைதூக்கினால் பயங்கரவாத தடைச் சட்டம் - அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ!
மழை அல்லது இடியுடன் கூடிய மழை தொடரும்: திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலையப் பொறுப்பதிகாரி தெரிவிப்பு
ஆசிரியர் சேவைக்குள் 592 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைப்பு!
|
|
|


