உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் யாழ்ப்பாணம் வருகை – மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபனுடன் விசேட கலந்துரையாடல்!

Tuesday, May 14th, 2024

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் ஜெரால்ட் ரெபெல்லி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது யாழ் மாவட்ட பதில் அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனை மாவட்ட செயலகத்தில் நேற்று (13) சந்தித்து கலந்துரையாடினார்.

இச் சந்திப்பில் “Food for Assets ” செயற்றிட்டத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் மற்றும் இச்செயற்றிட்டம் குறித்து எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த குழுவில் உலக உணவு திட்ட அரசாங்க பங்குடமை அதிகாரி முஸ்தபா நிஹ்மத், உலக உணவுத்திட்ட பொறியியலாளர் W.A.சந்திரதிலக, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இ.சுரேந்திரநாதன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வ.தர்சினி ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: