உலகின் முக்கிய சில நாடுகளின் தூதுவர்கள் வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடல்!

சுவிட்சர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களும், தென்னாப்பிரிக்காவின் உயர்ஸ்தானிகரும் வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துயாடியுள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Dr. Siri Walt), ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசுகொஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) மற்றும் தென்னாப்பிரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாண்டைல் எட்வின் ஷால்க் (Sandile Edwin Schalk) ஆகியோர் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை நேற்றிரவு சந்தித்து கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சிநேகபூர்வ கலந்துரையாடல் நடைபெற்றது. வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், நல்லிணக்க செயற்பாடுகள், மாகாணத்தில் எதிர்நோக்கப்படும் சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வ சந்திப்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|