உலகின் சராசரி வெப்பநிலை விரைவில் அதிகரிக்கும் – ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை!

Thursday, June 6th, 2024

உலகின் சராசரி வெப்பநிலை விரைவில் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று (5) ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டரெஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது உரையில், “கடந்த மே மாதம் உலகின் மிக வெப்பமான மாதமாகப் பதிவாகியுள்ளது.

கடந்த 12 மாதங்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.  அடுத்த 5 வருடங்களிற்குள் உலகின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியஸை கடப்பதற்கு 80 சதவீதம் வாய்ப்புள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய நாட்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் உலகம் முழுவதும் நேரடியாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

குறிப்பாக, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதிக வெப்பம் காரணமாக இந்த வருடத்தில் மாத்திரம் 250ற்கும் அதிகமானோர் இந்தியாவில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: