உலகளாவிய தடுப்பூசி விகிதத்தில் இலங்கை 3 ஆவது இடத்தில் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!
Thursday, January 13th, 2022
உலகளாவிய தடுப்பூசி விகிதத்தில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
194 நாடுகளை உள்ளடக்கியதாக இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டில் ஒரு நாடு என்ற வகையில் மக்களுக்குக் கிடைத்த மிக உயர்ந்த சாதனை இது என அமைச்சர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி மூலம் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். நாட்டுக்கு மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பில் பல நடவடிக்கைகள் கலந்துரையாடப்பட்டு வருவதாக வும், சில பிரச்சினை களை இனங்கண்டு தேவையான தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் அதிரடி முடிவு - பிரதமர் ரணில் !
ஜனவரி மூன்றாம் வாரத்தில் வாக்கு அட்டை விநியோகம்!
வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமானது - கைத்தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.திஸாநா...
|
|
|


