உலகக் கிண்ண “இருபதுக்கு 20” கிரிக்கெட் போட்டியில் பங்கெடுக்கும் இலங்கை அணிக்கு டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து.

உலகக்கிண்ண “இருபதுக்கு 20” கிரிக்கெட் போட்டியில் பங்கெடுக்கும் இலங்கை அணி வீரர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் இலங்கை அணியும் பங்கேற்கிறது.
அந்தவகையில் இம்முறை இப்போட்டித் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி “ஒரே நாடு ஒரே அணி” என்ற தொனிப்பொருளின்கீழ் பங்கேற்கின்றது.
தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி மீண்டுமொருமுறை உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ள வேண்டும் என்பதே எமதும் நாட்டுமக்களினது எதிர்பார்ப்பாக உள்ளது.
அந்தவகையில் அஞ்சலோ மத்தியூஸ் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி வெற்றிபெற்று சாதிக்கவேண்டுமென எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Related posts:
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு ஜனாதிபதி!
சாவகச்சேரியில் திருடர்கள் கைவரிசை : பலர் படுகாயம்!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அறிவிப...
|
|