உலகக் கிண்ணம் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகளில் மாட்டிறைச்சிக்கு தடை !
Sunday, October 1st, 2023
உலகக் கிண்ணம் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகளில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டிருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது.
உலகக் கிண்ணம் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி உட்பட பல அணிகளுக்கும் வழங்கப்படும் உணவு விவரங்கள் வெளிவந்துள்ளன.
அதன்படி, போட்டி நடைபெறும் 10 மைதானங்களிலும் மாட்டிறைச்சி உணவுக்கு அனுமதி கிடையாது.
மாட்டிறைச்சிக்கு பதிலாக சரிசம ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்ளும் வகையில் தங்களின் உணவு டயட் ஷீட்டை மாற்றியுள்ளது.
அதாவது வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளில் மட்டன் சாப்ஸ், ஆட்டிறைச்சி குழம்பு, பட்டர் சிக்கன், வறுத்த மீன் மற்றும் பாசுமதி அரிசி, ஸ்பாகெட்டி மற்றும் போலொனிஸ் சாஸ், காய்கறி புலாவ் மற்றும் ஹைதராபாத் பிரியாணி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இதில் மாட்டிறைச்சி இடம்பெறாதது சர்ச்சையாகி இருக்கிறது. இதை பாகிஸ்தான் ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
இந்தியாவில் பசு புனிதமாக சிலரால் கருதப்படுகிறது. எனவே, நாட்டின் பல பகுதிகளில் பசுக்களைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சி கொண்டு செல்வோரும், விற்பனை செய்வோரும்கூட பசு காவலர்களால் கொல்லப்பட்ட, தாக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.
இதன்காரணமாகவே இந்திய அரசு உலகக்கோப்பை வீரர்களுக்கு மாட்டிறைச்சியை தடை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் சில பகுதிகளில் இது பரவலாக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


